கிரிக்கெட்

முடிவுக்கு வந்த 17 ஆண்டுகால சகாப்தம்... சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் திடீர் விலகல்

கடந்த 17 ஆண்டுகளாக சிஎஸ்கே பயிற்சியாளராக இருந்தவர் ஸ்டீபன் பிளெமிங்.

சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஸ்டீபன் பிளெமிங் விலகியுள்ளார்.

2009 முதல்

ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கூட்டணிகளில் ஒன்றாகக் கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் ஆகியோரின் 17 ஆண்டுகால பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடக்க சீசனில் வீரராக சிஎஸ்கேவில் இணைந்த பிளெமிங், 2009 முதல் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்று, அணியை உலகின் மிகவும் வெற்றிகரமான டி20 பிராஞ்சைஸிகளில் ஒன்றாக மாற்றினார்.

அவரது பயிற்சியின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 ஐபிஎல் கோப்பைகளையும், 2 சாம்பியன்ஸ் லீக் டி20 பட்டங்களையும் வென்றது.

மேலும், 12 முறை பிளேஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்று, 10 முறை ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடி சாதனை படைத்தது.

அடுத்த பயிற்சியாளர்

பிளெமிங் விலகியதையடுத்து அடுத்த பயிற்சியாளர் யார் என்பது குறித்து கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.