ஐதராபாத்,
10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. ஐதராபாத் அணி 5 போட்டிகளில் 2 வெற்றி பெற்றுள்ளது. காயம் காரணமாக ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் தொடக்க கட்ட போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். இஷான் கிஷன் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், காயம் குணமடைந்ததால் கம்மின்ஸ் நாளை ஐதராபாத் அணியில் இணைய உள்ளார். இது ஐதராபாத் அணிக்கு பலமாக அமைந்துள்ளது.
ஐதராபாத் அணி நாளை மறுநாள் சென்னை அணியை எதிர்கொள்கிறது.இதில் கம்மின்ஸ் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.