சிட்னி,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனிதான் உலகின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் என்று டேவிட் வார்னர் பாராட்டியுள்ளார்.
உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜண்ட்ஸ் (WCL) தொடரின்போது பேசிய டேவிட் வார்னர், கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை அவர் கூறினார்.
வார்னரின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் தோனியின் ரசிகர்களிடையே தற்போது பெரும் வைரலாகி வருகிறது
கிரிக்கெட் உலகில் சிறந்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் யார் என்ற விவாதத்தில் இந்தியாவின் எம்.எஸ். தோனி, ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகிய இருவரும் அடிக்கடி ஒப்பிடப்படுகின்றனர்.
கில்கிறிஸ்ட் தனது அதிரடி பேட்டிங்கால் விக்கெட் கீப்பர்களின் ஆட்ட அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தினார். அதேவேளையில், தோனி தனது தனித்துவமான விக்கெட் கீப்பிங் திறமையாலும், ஆட்டத்தின் சூழலைக் கணித்து செயல்படும் திறனாலும் தனி முத்திரை பதித்தார்.
இந்திய அணிக்காக மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற கேப்டன் என்ற பெருமையையும் தோனி பெற்றுள்ளார். அவரது நீண்டகால கிரிக்கெட் பயணமும், விக்கெட் கீப்பிங் திறமையும் அவரைச் சிறந்த வீரர்களில் ஒருவராக நிலைநிறுத்தியுள்ளன.