கிரிக்கெட்

2-வது டெஸ்ட்: 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 495 ரன்கள் பின்னிலையில் இலங்கை

நாளை 3-ம் நாள் ஆட்டம் துவங்க உள்ளது.

கொழும்பு,

2-வது டெஸ்ட் போட்டியில் 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 495 ரன்கள் பின்னிலையில் உள்ளது.

தொடரில் இந்தியா ஆதிக்கம்

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றநிலையில், 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்திருந்தது.

2-வது நாளில் தொடர்ந்த இந்தியாவின் ஆதிக்கம்

2-வது நாள் ஆட்டம் இன்று துவங்கிய நிலையில், 2-வது செஷன் முடிவில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அப்போது இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 475 ரன்கள் எடுத்திருந்தது.

துருவ் ஜுரெல் 95 ரன்களுடனும், முகமது சிராஜ் ரன்கள் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். ஜுரெல் தனது சதத்தை பதிவு செய்ய 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், மழை நின்ற பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கியது.

2-வது டெஸ்ட் சதம்

ஆட்டம் மீண்டும் தொடங்கியதும் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய துருவ் ஜுரெல், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 2-வது சதத்தை எட்டினார். இதையடுத்து இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 503 ரன்கள் எடுத்தநிலையில், டிக்ளேர் செய்தது.

இந்திய அணியில் துருவ் ஜுரெல் 177 பந்துகளில் 115 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும், தேவ்தத் படிக்கல் 117 ரன்களும், ரிஷப் பந்த் 63 ரன்களும், சுப்மன் கில் 50 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 45 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 43 ரன்களும் எடுத்தனர்.

தொடரை கைப்பற்றும் முனைப்பில்

இந்திய அணி 503 ரன்களுக்கு டிக்ளேர் செய்த நிலையில், இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 2 விக்கெட்டுகளை இழந்து 8 ரன்கள் எடுத்தநிலையில் 2-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. லஹிரு உதாரா 1 ரன்னிலும் பிரபாத் ஜெயசூர்யா 2 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். தற்போது கமில் மிஷாரா 5 ரன்களுடன் களத்தில் உள்ளார். நாளை 3-ம் நாள் ஆட்டம் துவங்க உள்ளது.

2-வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.