கிரிக்கெட்

சென்னை அணிக்கு எதிரான தோல்வி: ஹர்திக் பாண்டியா கூறியது என்ன ?

சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

சென்னை,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்ப ரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 44-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் மும்பை அணி 7 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது.

பின்னர் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி 18.1 ஓவர்களில் சென்னை அணி 2 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தோல்வி தொடர்பாக மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில், இந்த சீசனே எங்களுக்குச் சரியாக அமையவில்லை. சிஎஸ்கே அணி பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் எங்களை விடச் சிறப்பாகச் செயல்பட்டனர்.

ஒரு கட்டத்தில் நாங்கள் 180-190 ரன்கள் எடுப்போம் என்று நினைத்தோம். ஆனால் 10 ஓவர்களுக்குப் பிறகு எங்களிடம் வேகம் இல்லை. சரியான பினிஷிங் கிடைக்கவில்லை.இந்த மைதானத்தில் நேரடியாகப் பந்துகளை எதிர்கொண்டு ஷாட்கள் ஆடுவது கடினமாக இருந்தது.

ஆனால் சிஎஸ்கே பேட்டர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக ஆடினார்கள். அவர்களை அவுட் செய்ய நாங்கள் நெருப்புப் பந்துகளைத்தான் வீசியிருக்க வேண்டும் போல!" என்று தெரிவித்தார்.