கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான தோல்வி: பாகிஸ்தான் கேப்டன் குடும்பத்துக்கு ரசிகர்கள் மிரட்டல்

அந்த அணியின் ரசிகர்கள் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர்.

இஸ்லாமாபாத்,

டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பல்லகெலேவில் நேற்று முன்தினம் இரவு நடந்த சூப்பர்8 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, இங்கிலாந்திடம் வீழ்ந்தது. இந்த தோல்வியால் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு மங்கியது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர்.

சில ரசிகர்கள் ஆத்திரத்தில் பாகிஸ் தான் கேப்டன் சல்மான் ஆஹா மற்றும் சக வீரர்களையும் அவர்களுடைய குடும்பத்தையும் கண்டபடி வசைபாடி சமூக வலைதளங்களில் திட்டி தீர்த் துள்ளனர். அத்துடன் அவர்களது குடும்பத்தினருக்கு மிரட்டலும் விடுத்து இருக்கிறார்கள். இது குறித்து சல்மான் ஆஹாவின் மனைவி சபே தனது இன்ஸ்டாகிராம் பதிவில், 'தன்னையோ தனது மகனையோ திட்டி மிரட்டுவ தன் மூலம் பாகிஸ்தான் உலகக் கோப்பையை வென்று விட முடி யாது என்று குறிப்பிட்டுள்ளார்.