கிரிக்கெட்

அயர்லாந்து அணிக்கு எதிரான தோல்வி: ஸ்ரேயஸ் ஐயர் கூறியது என்ன.?

அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

பெல்பாஸ்ட்,

அயர்லாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் கூறியதாவது;

தொடக்கத்தில் பந்துவீச்சாளர்கள் நன்றாகப் பந்துவீசினார்கள். அதனால் எங்களுக்கு ஒரு அற்புதமான தொடக்கம் கிடைத்தது, ஆனால் போட்டியின் இடையில், நாங்கள் திட்டமிடுவதில் தடுமாறினோம். 140 ரன்கள் ஒரு அற்புதமான ஸ்கோராக இருந்திருக்கும் என்று நான் நினைத்தேன். இருப்பினும், இங்கு இது ஒரு சிறந்த அனுபவம்.

தோல்வியை நாங்கள் மறந்துவிடப் போகிறோம். நிச்சயமாக இந்த ஆட்டத்திலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. மேலும் அடுத்த ஆட்டத்தில் நாங்கள் முழு வீச்சில் களமிறங்குவதை உறுதி செய்வோம்.

எந்த ஆட்டத்தையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று நான் நினைக்கிறேன். நீங்கள் போட்டிகளை எளிதாக வென்றுவிட முடியாது. நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். எதிரணியை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டும். சூழ்நிலையையும் ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாடுவோம்.”

இவ்வாறு அவர் கூறினார்.