ராவல்பிண்டி,
பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து அணிகள் பங்கேற்றுள்ள ஒரு நாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் ராவல்பிண்டியில் நேற்று நடந்த 2-வது லீக்கில் இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மல்லுக்கட்டின. முத லில் பேட் செய்த பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்கு 302 ரன்கள் குவித்தது. ஹசன் நவாஸ் (79 ரன்), ஆல்-ரவுண்டர் அரா பத் மின்ஹாஸ் (59 ரன்) அரைசதம் அடித்தனர். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 38.4 ஓவர்களில் 215 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் 87 ரன்கள் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பெற்றது.
டாப்-3 வீரர்கள் டாம் பான்டன் (57 ரன்), பென் டக்கெட் (45 ரன்), ஜோ ரூட் (33 ரன்) ஆகியோர் சிறந்த பங்களிப்பை அளித்தும் பின் வரிசை வீரர்கள் சொதப்பலால் இங்கிலாந்து தோல்வியை தழுவியது.
தோல்வி தொடர்பாக பேசிய இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் கூறியதாவது,
நாங்கள் எதிர்பார்த்தபடியே ஆடுகளத்தில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்தது.
பான்டன் மற்றும் டக்கெட் மிகச் சிறப்பாக விளையாடி, கிட்டத்தட்ட 100 ரன்கள் கூட்டணி அமைக்கும் அளவுக்கு அணிக்கு வலுவான தொடக்கத்தை வழங்கினர். ஆனால், அதன் பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தோம். பேட்டர்கள் இணைந்து நிலையான கூட்டணிகளை அமைக்க முடியவில்லை. இறுதியில், அதன் பாதிப்பைச் சந்தித்து தோல்வியடைந்தோம்.
ஒவ்வொரு அணியும் வெற்றி பெறவே விரும்பும். மிடில் ஓவர்களில் ஸ்டிரைக்கை மாற்றி மாற்றி ரன்கள் எடுப்பது குறித்து நாங்கள் நிறையப் பேசியிருக்கிறோம். ஆனால், குறிப்பாகச் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நாங்கள் சற்று அதிகமாகவே எச்சரிக்கையுடன் விளையாடியதாக நினைக்கிறேன். சில கட்டங்களில் அவர்களுக்கு இன்னும் அதிக அழுத்தம் கொடுத்திருக்கலாம். இன்னும் சிறப்பாக மீண்டு வருவோம். என தெரிவித்தார்.