கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தோல்வி: பாட் கம்மின்ஸ் கூறியது என்ன ?

ஆஸ்திரேலியாவை 176 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றிபெற்றது.

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடியது.இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இதையடுத்து நடந்த டெஸ்ட்டில் 1-1 என்ற புள்ளிகள் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தன. 3வது மற்றும் கடைசி டெஸ்ட் கடந்த 27ம் தேதி தொடங்கியது. பரபரப்பாக நடந்த இந்த டெஸ்ட்டில் நேற்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியாவை 176 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் தொடரை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.

கம்மின்ஸ்

தோல்வி தொடர்பாக பேசிய ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ்,

உண்மையிலேயே இந்தப் போட்டி ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருந்தது, ஆரம்பத்தில் நாங்கள் சிறப்பாக விளையாடினோம். முதல் நாளிலேயே பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியது மிகச் சிறப்பான விஷயம் என்று நினைக்கிறேன். அதன் மூலம் போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்கினோம்.

அதன்பிறகு பேட்டிங்கில் சற்று பின்தங்கினோம். ஆனால், ஒரு சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைந்ததால் மீண்டும் முன்னிலை பெற்றோம். மூன்றாவது நாள் முடிவில் 40 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழக்கச் செய்து, நாங்கள் மிகச் சிறந்த நிலையில் இருந்தோம். ஆனால், நேற்று எங்களுக்கு மிகவும் கடினமான நாளாக அமைந்தது. அவர்கள் அமைத்த இரண்டு பார்ட்னர்ஷிப்கள், இன்று இலக்கைத் துரத்துவதை மிகவும் கடினமாக்கிவிட்டன.

SCROLL FOR NEXT