கிரிக்கெட்

சென்னை அணிக்கு எதிராக டெல்லி பேட்டிங் தேர்வு

டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

புதுடெல்லி,

10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நக ரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று அரங்கேறும் 48-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சை எதிர்கொள்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்கிறது.