ஐதராபாத்,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங் களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணி கள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
இந்த போட்டி தொடரில் ஐதராபாத்தில் இன்று நடை பெறும் 31-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.