கிரிக்கெட்

மகளிர் பிரீமியர் லீக்: குஜராத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த டெல்லி

இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியை டெல்லி அணி எதிர்கொள்ள உள்ளது.

காந்தி நகர்,

5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மகளிர் பிரீமியர் லீக் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஏற்கனவே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுவிட்டது.

இந்நிலையில், இறுதிப்போட்டிக்கு செல்லும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் எலிமினேட்டர் சுற்று குஜராத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் ஜெயண்ட்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது. குஜராத் தரப்பில் அந்த அணியின் தொடக்க வீரர் மொனி அதிகபட்சமாக 51 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். பெங்களூரு தரப்பில் அந்த அணியின் ஹெண்ட்ரி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி 15.4 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் 169 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் குஜராத்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அபார வெற்றிபெற்றது. குஜராத் அணியின் தொடக்க வீராங்கனை அதிகபட்சமாக 24 பந்துகளில் 43 ரன்கள் குவித்தார்.

இதன் மூலம் மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டிக்குள் டெல்லி கேப்பிட்டல்ஸ் நுழைந்தது. குஜராத்தில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியை டெல்லி அணி எதிர்கொள்ள உள்ளது. போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

பாகிஸ்தான் மற்றும் சீனா போல் ராகுல் காந்தி நடந்து கொள்கிறார்: பா.ஜ.க. குற்றச்சாட்டு

விவசாயிகளின் நலனில் இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் சமரசம் செய்யாது: பிரதமர் மோடி

டெல்லி: ஹோலி, தீபாவளியில் மக்களுக்கு இலவச கியாஸ் சிலிண்டர்கள் அறிவிப்பு

16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகம் பயன்படுத்த தடை; ஸ்பெயின் திட்டம்

இந்தியாவில் 2025-ல் 19 விமான விபத்துகள்: மத்திய அரசு தகவல்