டெல்லி,
ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லியில் இன்று நடைபெற்று வரும் 39வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றன
இதில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
டெல்லி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர் சஹில் பிரஹா ரன் எதுவும் எடுக்காமலும் (0), கேஎல் ராகுல் 1 ரன்னிலும், நிதிஷ் ரானா 1 ரன்னிலும், சமீர் ரிஸ்வி ரன் எதுவும் எடுக்காமலும் (0), ஸ்டப்ஸ் 5 ரன்னிலும், கேப்டன் அக்சர் பட்டேல் ரன் எதுவும் எடுக்காமலும் (0) அடுத்தடுத்து அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர்.
டெல்லி 4 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 8 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. டேவிட் மில்லர், அபிஷேக் பொரேல் களத்தில் உள்ளனர். பெங்களூரு தரப்பில் புவனேஷ்வர் குமார், ஹேசல்வுட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
ஐபிஎல் வரலாற்றில் குறைந்தபட்ச அணி ரன்கள் அடித்த அணியாக பெங்களூரு உள்ளது. 2017ம் ஆண்டு கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு 49 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த ரன்களே ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி அடித்த குறைந்தபட்ச ரன்களாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.