கிரிக்கெட்

கொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் நிர்ணயித்த டெல்லி

டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் 142 ரன்கள் எடுத்தது.

புதுடெல்லி,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரி வில் உள்ள அணிகளுடன் ஒரு முறை, எதிர்பிரி வில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் தலா 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளை யாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட் டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரகானே பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் டெல்லி அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். டெல்லி அணியில் பதும் நிசாங்கா மட்டும் நிலைத்து விளையாடிய அரைசதம் அடித்தார்.

இதனால் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் 142 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் அன்குல் ராய் , கார்த்திக் தியாகி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.