புதுடெல்லி,
10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நக ரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று அரங்கேறும் 48-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சை எதிர்கொள்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியில் நிலைத்து விளையாடிய சமீர் ரிஸ்வி 40 ரன்கள் எடுத்தார். சென்னை அணியில் நூர் அகமது 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.