புதுடெல்லி,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட்திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங் களில் நடைபெறுகிறது. இந்நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், காயம் காரணமாக இதுவரை நடைபெற்ற போட்டிகளில் விளையாடவில்லை.
இந்த நிலையில் மிட்செல் ஸ்டார்க், காயத்திலிருந்து மீண்டு அணிக்குத் திரும்ப கிரிக்கெட் ஆஸ்திரேலியா (CA) அனுமதி வழங்கியுள்ளது. இதனால் ஸ்டார்க் இன்று நடைபெற இல்ல ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட உள்ளார்.
ஐபிஎல் 2026 தொடரில் பின்னடைவைச் சந்தித்து வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC) அணிக்கு ஒரு உற்சாகமான செய்தி கிடைத்துள்ளது.
புள்ளிப்பட்டியலில் நடுப்பகுதியில் தடுமாறி வரும் டெல்லி அணிக்கு, ஸ்டார்க்கின் வருகை மிக முக்கியமானது. கடைசி ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்த டெல்லி திணறி வரும் நிலையில், ஸ்டார்க்கின் யார்க்கர்கள் அணிக்கு கைகொடுக்கும்.