கிரிக்கெட்

தனது ஜெர்சி நம்பரை மாற்றிய தோனி

சென்னை அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை,

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர். சென்னை அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை அணி வீரர் தோனி தனது ஜெர்சி நம்பரை மாற்றி ஐபிஎல் போட்டிகளில் விளையாட உள்ளார்.தோனி என்றாலே அனைவருக்கும் 7 ஆம் நம்பர் தான் நினைவுக்கு வரும்.

ஆனால் இனிமேல் 7 கிடையாது, 8 என கூறியுள்ளார் தோனி. அதாவது தோனியின் ஜெர்சி எண் 7-இல் இருந்து 8க்கு மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

சில எண்கள் நம்முடன் அப்படியே தங்கிவிடும். 7 எப்போதும் எனக்கு அப்படிப்பட்ட ஒன்றுதான். ஆனால் இன்று, நான் 8-க்கு மாறுகிறேன்.அதற்கான காரணம் உங்களுக்கு விரைவில் தெரியும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.