கிரிக்கெட்

தோனிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரம்மாண்ட பிரியாவிடை

மைதானத்தின் மேலே சிறப்பு டிரோன் கண்காட்சி நடத்தப்பட்டது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது வீரராக விளையாடும் பயணத்தை முடித்துக்கொண்ட முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிரம்மாண்டமான முறையில் மரியாதை செலுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக நேற்று (நவம்பர் 17) சென்னையில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தின் மேலே சிறப்பு டிரோன் கண்காட்சி நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான டிரோன்கள் வானில் ஒளிர்ந்து தோனியின் முகம், அவரது புகழ்பெற்ற ஹெலிகாப்டர் ஷாட், ஸ்டம்பிங் காட்சி மற்றும் 7-ம் எண் ஜெர்சியுடன் கூடிய ‘Thala Forever’ வாசகத்தை உருவாக்கின. இந்தக் கண்காட்சி ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த டிரோன் நிகழ்ச்சியை நேரலையாக ஒளிபரப்பியது. 'Lighting up Chennai with the aura of Thala!' என்ற வாசகத்துடன் நிகழ்ச்சியின் புகைப்படங்களையும் காணொளிகளையும் பகிர்ந்தது. இதற்கு ஏராளமான ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு தோனிக்கு தங்களது அன்பையும் நன்றியையும் தெரிவித்தனர்

ஐபிஎல்

2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியதில் இருந்து சென்னை அணியின் அடையாளமாக விளங்கிய தோனி, அந்த அணிக்காக 17 சீசன்களில் விளையாடியுள்ளார். அவரது தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. தற்போது வீரராக ஓய்வு பெறும் முடிவை அறிவித்துள்ள தோனி, 2027-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை அணியின் ஆலோசகராக (Team Mentor) புதிய பொறுப்பை ஏற்க உள்ளார். இதன் மூலம் சென்னை அணியுடனான அவரது பயணம் தொடர்கிறது.

SCROLL FOR NEXT