சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுழற்பந்து வீச்சாளர்களான அகில் ஹுசைன் மற்றும் நூர் அகமது ஆகியோர் மும்பைக்கு எதிராக சிறப்பாக பந்து வீசினர். குறிப்பாக அகில் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. சுழற்பந்து வீச்சில் இந்த ஜோடி எதிரணிகளை திணறடித்ததற்கு பின்னால் டோனியின் ஆலோசனை இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, அஸ்வின், ஜடேஜாவுக்கு பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறந்த ஸ்பின் ஜோடி கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தை நூர் அகமது, அகில் ஹுசைன் ஜோடி போக்கியுள்ளனர். இதற்கு பின்னால் மாஸ்டர் மைண்டாக தோனி இருந்தாராம்.
நூர் பந்தை வளைத்து அடிக்க ரூம் கொடுப்பதை கவனித்த டோனி, அதிகமாக ‘கூக்ளி’யை நம்பாமல் வழக்கமான ‘லெக்-பிரேக்’ில் கவனம் செலுத்துமாறும், பந்து டிப் ஆகி சைட் ஸ்பின்னாகும் வகையில் காற்றில் செல்லும் வேகத்தை குறைக்குமாறும் அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.