கிரிக்கெட்

’தோனியின் அறிவுரையே என் சிறப்பான பேட்டிங்கிற்கு காரணம்’ - சிவம் துபே

தோனியின் வழிகாட்டுதலே தனது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியமைத்ததாக சிவம் துபே கூறியுள்ளார்.

மும்பை,

டி20 உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை ஷிவம் துபே தட்டிச் சென்றார். இந்நிலையில் தனது சிறப்பான ஆட்டத்திற்கு எம்.எஸ். தோனி அளித்த அறிவுரையே காரணம் என்று ஷிவம் துபே நெகிழ்ச்சியுடன் கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது;

ஒவ்வொரு பந்திலும் சிக்ஸர் அடிக்க வேண்டிய அவசியம் இல்லை. பவுண்டரி அடிக்கலாம் அல்லது ஒரு ரன் எடுக்கலாம் என்று தோனி எனக்குக் கூறினார். இது எனது பேட்டிங்கில் தெளிவை ஏற்படுத்தியது. அதனால் நான் ஆரம்பத்தில் வரும்போது அந்த விஷயம் எப்போதும் என் மனதில் இருக்கும். தோனியின் வழிகாட்டுதல் எனது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியமைத்தது. இக்கட்டான சூழலில் இந்திய அணியை மீட்க அது உதவியது.”

இவ்வாறு சிவம் துபே கூறினார்.