சென்னை,
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் விளையாடாது என்பது வருத்தமளிப்பதாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில்,
வங்கதேச அணி உலகக்கோப்பைத் தொடரிலிருந்து நீக்கப்பட்டநிலையில், மாற்று அணியாக ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், வங்கதேசத்திற்குத் தங்களின் ஆதரவைத் தெரிவிக்கும் வகையிலும் இந்தியாவுடனான போட்டியை மட்டும் புறக்கணிக்கப் பாகிஸ்தான் அரசு முடிவு செய்தது.
இலங்கையில் டி20 உலகக்கோப்பையில் விளையாடுவோம். ஆனால் இந்தியாவுக்கு எதிராக விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் தெரிவித்தது. இந்நிலையில், இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பாகிஸ்தானை எச்சரித்துள்ளது.
இலங்கையில் வரும் 15-ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத இருப்பது குறிப்பிடத்தக்கது.