கிரிக்கெட்

யாருடைய நிழலிலும் இருக்க கூடாது - இந்திய டி20 அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர்

ஷ்ரேயாஸ் அய்யர் இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை,

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணி டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில், அயர்லாந்துக்கு எதிராக 2 போட்டிகளும், இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகளிலும் விளையாடுகிறது. இந்த போட்டிகளில், சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக அணியில் ஷ்ரேயாஸ் அய்யர் சேர்க்கப்பட்டு உள்ளார்.ஷ்ரேயாஸ் அய்யர் இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், யாருடைய நிழலிலும் இருக்க கூடாது என ஷ்ரேயாஸ் அய்யர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். நான் கேப்டனாக இல்லாதபோது எப்படி இருந்தேனோ அப்படியே இருக்க விரும்புகிறேன். யாருக்கும் மாற்றாகவோ அல்லது யாருடைய நிழலின் அடியிலோ இருக்க கூடாது. நிறைய சவால்களை சந்தித்தே முன்னேறி வந்துள்ளேன். எனக்கு சவால் அளித்த அனைவரையும் வெல்ல வேண்டும் என்பதே என்னுடைய மனதில் இருந்தது. என தெரிவித்துள்ளார்.