கிரிக்கெட்

பெங்களூரு மைதானத்தில் டிராவிட், கும்பிளேவுக்கு கவுரவம்

டிராவிட், கும்பிளே இருவரது பெயர்கள், ஸ்டேடியத்தில் உள்ள கேலரியின் ஒரு பகுதிக்கு சூட்டப்பட்டுள்ளது.

பெங்களூரு,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களான கர்நாடகாவைச் சேர்ந்த ராகுல் டிராவிட், அனில் கும்பிளே ஆகியோரது பெயர்கள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் உள்ள கேலரியின் ஒரு பகுதிக்கு சூட்டப்பட்டுள்ளது. அந்த பெயர் பலகை நேற்று திறக்கப்பட்டது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டிக்கு முன்னதாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் வீரர்களுடன், அவர்களது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.