பெங்களூரு,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் ஒரு முறை, எதிர்பிரிவில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.இந்த தொடரில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 23-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம் பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை எதிர்கொண்டது.இந்த போட்டி முடிவில் ஆர்.சி.பி. அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், லக்னோ அணி வீரர் முகுல் சவுத்ரி விராட் கோலியை சந்தித்துள்ளார். இது தொடர்பாக முகுல் சவுத்ரி கூறியதாவது,
டிவியில் அவரை பார்த்ததில் இருந்து.. ஒன்றாக விளையாடி, அதே டிவியில் அவருடன் Frame பகிர்ந்து கொள்வது வரை. கனவுகள் நனவாகியுள்ளது. என தெரிவித்துள்ளார்.