கிரிக்கெட்

குல்தீப் யாதவை நீக்கியது முட்டாள்தனமானது: அஸ்வின்

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ் வின் இந்த முடிவு தவறானது என்று விமர்சித்துள்ளார்.

சென்னை,

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 7 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அந்த அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது ஆட்டத்தில் 33 ரன் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், 2-வது ஆட் டத்தில் 53 ரன்கள் வழங்கி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார். 2-வது ஆட்டத் தில் இந்திய அணி தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 3-வது மற்றும் 4-வது 20 ஓவர் போட்டிக்கான ஆடும் லெவன் அணி யில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படவில்லை. குல்தீப் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ் வின் இந்த முடிவு தவறானது என்று விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ஆர்.அஸ்வின் யூடியூப் சேனலில் பேசுகையில், 20 ஓவர் போட்டிக்கான ஆடும் லெவனில் இருந்து குல்தீப் நீக்கப்பட்டது மிகுந்த ஆச்சரியம் அளிக்கிறது. பந்து நன்றாக பவுன்ஸ் ஆகக்கூடிய ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அனுகூலமாக இருந்ததில்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் வெஸ்ட்இண்டீஸ் பேட்ஸ்மேன்கள், குல்தீப்பின் 'கூக்ளி மற்றும் 'லெக் ஸ்பின்' பந்து வீச்சை கணிக்க தடுமாறுகிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் அவர்களுக்கு எதிரான ஆட்டத்தில் குல்தீப்பை அணியில் இருந்து நீக்குவது என்பது முட்டாள்தனமான முடிவாகும். அவர் அணியில் இருந்திந்தால் 15-20 ரன்கள் வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்க முடியும். 2-வது ஆட்டத்தில் இந்திய அணியின் தோல்விக்கு குல்தீப் தான் காரணம் என்று கூறுவது தவறான வாதமாகும்' என்றார்.

SCROLL FOR NEXT