சென்னை,
துலீப் டிராபி இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடக்கிறது. இதில் தெற்கு மண்டலம், இஷான் கிஷன் தலைமையிலான கிழக்கு மண்டல அணியுடன் மோதுகிறது.
இந்த நிலையில், சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள துலீப் கோப்பை இறுதிப்போட்டியை ரசிகர்கள் இலவசமாக நேரில் சென்று பார்க்கலாம். போட்டியைக் காண வரும் ரசிகர்களிடம் எந்தவித நுழைவுக் கட்டணமும் வசூலிக்கப்படாது. கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மைதானத்திற்கு வந்து போட்டியை நேரில் கண்டு ரசிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.