சென்னை,
2026-27 துலீப் டிராபி இறுதிப்போட்டியை பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சென்டர் ஆப் எக்ஸலன்ஸில் நடத்துவதற்கு பதிலாக, சென்னையின் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்திற்கு மாற்றி பிசிசிஐ அறிவித்துள்ளது. ரசிகர்கள் மைதானத்தில் நேரடியாக போட்டியை காணும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஐந்து நாட்கள் நடைபெறும் இறுதிப்போட்டி செப்டம்பர் 6 முதல் 10ஆம் தேதி வரை நடைபெறும். போட்டியின் காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்கள் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23 மற்றும் 30ஆம் தேதிகளில் பெங்களூரு சென்டர் ஆப் எக்சலன்ஸில் நடைபெறும். அங்கு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.
மேலும், துலீப் டிராபியின் அனைத்து போட்டிகளும் நேரலையாக ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டிகளுக்கு தொலைக்காட்சி ஒளிபரப்பும் இருக்கும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது