கிரிக்கெட்

துலீப் டிராபி: தெற்கு மண்டல அணி தடுமாற்றம்

தொடர்ந்து பேட்டிங் செய்த தெற்கு மண்டலம் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

சென்னை,

சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் கிழக்கு மண்டலம் – தெற்கு மண்டலம் இறுதிப்போட்டியில் 3-ஆம் நாள் ஆட்டத்தில் கிழக்கு மண்டலம் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

முதல் இன்னிங்ஸில் கிழக்கு மண்டலம் 708 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியின் கேப்டன் இஷான் கிஷன் 270 ரன்கள் விளாசியது இந்தப் போட்டியின் மிகப்பெரிய சிறப்பாக அமைந்தது. அவர் 334 பந்துகளில் 270 ரன்கள் எடுத்து, வெறும் 30 ரன்களில் முச்சதத்தை தவறவிட்டார்.

தொடர்ந்து பேட்டிங் செய்த தெற்கு மண்டலம் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தேவ்தத் படிக்கல் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை முகேஷ் குமார் வெளியேற்றினார்.

பின்னர் முகமது ஷமி முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி தெற்கு மண்டலத்தின் மீது அழுத்தத்தை அதிகரித்தார். பின்னர் திலக் வர்மா அபாரமாக விளையாடிய திலக் வர்மா அரைசதம் அடித்தார். இதனால் 3வது நாள் முடிவில் தெற்கு மண்டல அணி 6 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் எடுத்தது. திலக் வர்மா 56 ரன்களும் , மிலிந்த் 2 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

SCROLL FOR NEXT