நாக்பூர்,
இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவ், விதர்பா அணியில் இருந்து விலகி வேறு மாநில அணிக்காக விளையாட முடிவு செய்துள்ளார். இதற்காக விதர்பா கிரிக்கெட் சங்கத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
38 வயதான உமேஷ் யாதவ், வரும் உள்நாட்டு சீசனில் வேறு மாநில அணிக்காக விளையாட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “இந்த சீசனில் இருந்து வேறு மாநில அணிக்காக விளையாட முடிவு செய்துள்ளேன். விதர்பா கிரிக்கெட் சங்கத்திடம் இருந்து என்ஓசி பெற்றுவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சில மாநில கிரிக்கெட் சங்கங்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், அடுத்ததாக எந்த அணிக்காக விளையாட உள்ளார் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.