ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும். 2-வது ஆட்டத்தில் இங்கி லாந்தும் வெற்றி பெற்றன. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று நடந்தது.
பின்னர் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்த போது, 3 முறை மழையால் ஆட்டம் தடைபட்டதால் 2 முறை ஓவர்கள் குறைக்கப்பட்டது. கடைசியாக 16 ஓவர்களில் 93 ரன் எடுத்தால் வெற்றி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனை நோக்கி ஆடிய இங்கிலாந்து 8.5 ஓவர்களில் அணி 3 விக்கெட்டுக்கு 93 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. பில் சால்ட் 5 ரன்னிலும், கேப்டன் ஹாரி புரூக் 9 ரன்னிலும், அனூரின் டொனால்டு 32 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். டாம் பான்டன் 10 ரன்னுடனும், ஜோர்டான் காக்ஸ் 33 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் அள்ளிய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜாமி ஓவர்டான் ஆட்டநாயகன் விருது பெற்றார். அத்துடன் சர்வதேச 20 ஓவர்போட்டியில் 5 விக்கெட் எடுத்த 2-வது இங் கிலாந்து பவுலர் என்ற சிறப்பையும் பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணி கள் இடையிலான 4-வது 20 ஓவர் போட்டி சிட்னியில் நாளை நடக்கிறது.
வெற்றி தொடர்பாக பேசிய இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் கூறியதாவது,
வீரர்கள் இன்று வெளிப்படுத்திய ஆட்டம் நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக இருந்தது. குறிப்பாக ஜேமி ஓவர்டன் இன்றைய ஆட்டத்தில் அபாரமாகச் செயல்பட்டார். கடந்த இரண்டு வாரங்களாக அவர் கடுமையாகப் பயிற்சி மேற்கொண்டு வந்தார். நேற்றைய பயிற்சியிலும் கூடுதல் கவனம் செலுத்தி, தனது ஆட்ட முறையை எளிமைப்படுத்திக் கொண்டார். அதற்கான பலனை இன்று அவர் பெற்றுள்ளார்.
ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்வதற்கான சிறந்த வழியைக் கண்டறிவதுதான் கிரிக்கெட்டின் ஒரு பகுதியாகும். இது குறுகிய ஓவர் போட்டி என்பதால் பந்தை மைதானத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் அடிக்க பேட்ஸ்மேன்கள் முயற்சிப்பார்கள். ஆனால் ஓவர்டன் மிகவும் துல்லியமாகப் பந்துவீசினார். தேவைக்கேற்ப பீல்டிங் வியூகத்தை சிறிது மாற்றி அமைத்து, பேட்ஸ்மேன்களே தவறு செய்யும் வகையில் அவரால் பந்துவீச முடிந்தது.
ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணியின் சொந்த மண்ணுக்குச் சென்று, அந்த அணியை வீழ்த்துவது எங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய சாதனையாக இருக்கும். சிட்னியில் தொடரை வெற்றியுடன் நிறைவு செய்வது மகிழ்ச்சியான விஷயமாக இருக்கும். இருப்பினும், நாங்கள் தற்போதைய ஆட்டத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். நிகழ்காலத்தில் இருந்து, அடுத்ததாக எங்களுக்கு முன்னால் இருக்கும் சவாலை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.என தெரிவித்தார்.