இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹோபர்ட்டில் நேற்று நடந்தது.'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் பான்டன், பென் டக்கெட் ஆகியோர் களம் இறங்கி னர். இருவரும் அருமையாக ஆடி நல்ல தொடக்கம் அமைத்தனர். ஸ்கோர் 74 ரன்னை (8.4 ஓவரில்) எட்டிய போது டாம் பான்டன் 44 ரன்னில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்த ஜோ ரூட் 12 ரன்னிலும், கேப்டன் ஹாரி புரூக் 17 ரன்னிலும். ஜோர்டான் காக்ஸ் 12 ரன்னிலும், ஜோப்ரா ஆர்ச்சர் 7 ரன்னிலும் ஆட்டமிழந் தனர். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய பென் டக்கெட் 94 பந்துகளில் சதத்தை எட்டினார். அவர் அடித்த 7-வது சதம் இதுவாகும். அபாரமாக ஆடிய பென் டக்கெட் 133 ரன்னில் (115 பந்து, 15 பவுண்டரி, 3 சிக்சர்) மேட் ரென்ஷா சுழலில் விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்லிஸ்சிடம் சிக்கினார்.
நன்றாக ஆடிய வில் ஜாக்ஸ் (59 ரன். 48 பந்து, 4 பவுண்டரி. ஒரு சிக்சர்) கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார். 48.3 ஓவர்களில் இங்கிலாந்து அணி 328 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் ஜாக் எட்வர்ட்ஸ் 4 விக்கெட்டும், மேட் ரென்ஷா 3 விக்கெட் டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 329 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
ஆஸ்திரேலிய அணியில் மேட் ரென்ஷா (55 ரன்), அலெக்ஸ் கேரி (37 ரன்), ஜாக் எட்வர்ட்ஸ் (31 ரன்) தவிர மற்றவர் கள் தாக்குப்பிடிக்கவில்லை. கேப்டன் மிட்செல் மார்ஷ் ஒரு ரன்னிலும், டிராவிஸ் ஹெட் 4 ரன்னிலும், கேமரூன் கிரீன் 3 ரன்னிலும் (ரிட்டயர்டு ஹர்ட்) வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். 46.5 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 231 ரன்னில் அடங்கியது. இதனால் இங்கிலாந்து அணி 97 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து தரப்பில் சோனி பாகெர் 4 விக்கெட் டும், லியாம் டாவ்சன் 3 விக்கெட்டும் சாய்த்தனர். இங்கிலாந்து வீரர்கள் பென் டக்கெட் ஆட்டநாயகன் விருதும். டாம் பான்டன் தொடர்நாயகன் விருதும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 135 ரன் வித்தியாசத்திலும் வென்றிருந்தது. 2018-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இங்கிலாந்து வெல்வது இதுவே முதல்முறையாகும்.
வெற்றி தொடர்பாக பேசிய இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் ,
இந்தத் தொடரின் தொடக்கம் எங்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக அமையவில்லை. பொதுவாகவே ஒரு தொடரின் ஆரம்பப் போட்டிகளில் நாங்கள் மெதுவாகத் தொடங்குவது வழக்கமாக உள்ளது. எனவே, இனிவரும் போட்டிகளில் இந்த விஷயத்தைப் பற்றி ஆலோசித்து சரிசெய்ய வேண்டியுள்ளது. இருப்பினும், அடிலெய்டு போட்டியில் நாங்கள் மீண்டு வந்த விதமும், குறிப்பாக, இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீண்டு வந்து அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்கள் அனைவரும் தங்களை நினைத்து பெருமைப்பட வேண்டும். நேற்று அணியின் செயல்பாடு ஒட்டுமொத்த அணிக்கும் மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது.
தொடக்க வீரர்கள் இருவரும் மிகச்சிறப்பாக இணைந்து விளையாடி வருகின்றனர். இருவருக்கும் இடையிலான உயர வித்தியாசம் அவர்களது பேட்டிங்கில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல், ஒருவர் இடது கை பேட்ஸ்மேனாகவும் மற்றொருவர் வலது கை பேட்ஸ்மேனாகவும் இருப்பது எதிரணியின் பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக அமைகிறது. இந்த இடது கை – வலது கை கூட்டணி எங்கள் அணிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதேபோன்று இருவரும் தொடர்ந்து சிறப்பாக விளையாடினால், இன்னிங்ஸின் கடைசிப் பகுதியில் அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்துவதற்கு நல்ல அடித்தளமாக அமையும். இருவரும் ஒருவருக்கொருவர் நல்ல புரிதலுடன் விளையாடி வருவதால் அவர்களது கூட்டணி எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.