கிரிக்கெட்

இங்கிலாந்து கிரிக்கெட்: ஜாக் கிராலி ஒப்பந்தத்திலிருந்து நீக்கம் – 8 வீரர்களுக்கு புதிய மத்திய ஒப்பந்தம்

எட்டு வீரர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளனர்.

லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமான , 2026–27 சீசனுக்கான மத்திய ஒப்பந்தப் பட்டியலில் அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராலி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் லூக் வுட் ஆகியோரின் ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படவில்லை.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 4–1 என்ற கணக்கில் தோல்வியடைந்த நிலையில், அந்தத் தொடரில் கிராலி சராசரியாக 27.30 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதனால் அவரது மத்திய ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை. அதே நேரத்தில், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்து அணியில் இருந்து விலகியிருந்த வேகப்பந்து வீச்சாளர் ராபின்சன் மீண்டும் மத்திய ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளார். நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகளில் 28 விக்கெட்டுகளை வீழ்த்தி, சராசரி 9.32 உடன் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

2026–27 சீசனுக்கான ஒப்பந்த வீரர்களின் எண்ணிக்கையை 30-லிருந்து 39 ஆக உயர்த்தியுள்ளது. இதில் 30 வீரர்களுக்கு முழுமையான மத்திய ஒப்பந்தங்களும், 9 வீரர்களுக்கு வளர்ச்சி ஒப்பந்தங்களும் வழங்கப்பட்டுள்ளன. டாம் பான்டன், சாம் குக், எமிலியோ கே, மேத்யூ பிஷர், டான் லாரன்ஸ், ஒல்லி ராபின்சன், ஜோர்டன் காக்ஸ் மற்றும் ஹென்றி குரோகோம் ஆகிய எட்டு வீரர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளனர். ஜோர்டன் காக்ஸ் மற்றும் ஹென்றி குரோகோம் ஆகியோருக்கு இரண்டு ஆண்டுகளுக்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT