லீட்ஸ்,
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைபட்டுள்ளது. பாகிஸ்தான் வீரர்கள் அப்துல்லா 12 ரன்னிலும், இமாம் 5 ரன்னிலும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ராபின்சன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.