கிரிக்கெட்

டி20 தரவரிசையில் இங்கிலாந்து அணி முதலிடதிற்கு வர வேண்டும்: ஹாரி புரூக்

இந்த போட்டியில் வென்று தொடரை முழுமையாக வெல்ல இங்கிலாந்து அணி முயற்சிக்கும்.

லண்டன்,

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி பிரிஸ்டாலில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி படு தோல்வியடைந்தது. இதனால் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிகெட் தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றுள்ளது.முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் வென்று தொடரை முழுமையாக வெல்ல இங்கிலாந்து அணி முயற்சிக்கும்.

இந்த நிலையில், இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் கூறியதாவது,

5வது போட்டியில் வெற்றி பெற்றால் நாங்கள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிப்போம் என்று எங்களிடம் கூறப்பட்டுள்ளது. அந்த இலக்கைத்தான் நாங்கள் நிச்சயமாகக் குறிவைத்துள்ளோம்.இந்தியா ஒரு வலுவான அணி. கடந்த சில ஆண்டுகளில் அவர்கள் வெளிப்படுத்திய அளவுக்குச் சிறந்த ஆட்டத்தை அநேகமாக இப்போது அவர்கள் வெளிப்படுத்தவில்லை என்றாலும், எங்கள் திட்டங்களை நாங்கள் செயல்படுத்திய விதம் குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.என தெரிவித்தார்.