கிரிக்கெட்

’டி20 உலகக் கோப்பை’ - அரையிறுதியில்...விராட் சாதனையை சமன் செய்த சஞ்சு சாம்சன்

நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 89 ரன்கள் குவித்தார்.

மும்பை,

2026 டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதனை படைத்துள்ளார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 89 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு வலுவான தொடக்கத்தை வழங்கினார்.

ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய சஞ்சு, பவர்பிளே ஓவர்களில் பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் அடித்து ரன்களை வேகமாக குவித்தார். அவரது இந்த இன்னிங்ஸ் இந்திய அணியின் பெரிய ஸ்கோருக்கு அடித்தளமாக அமைந்தது.

இந்த இன்னிங்ஸின் மூலம் டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டிகளில் அதிக தனிப்பட்ட ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் சஞ்சு சாம்சன் இடம்பிடித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியல்:

105 - ஜேக்கப் பெத்தேல்(இங்கிலாந்து)vs இந்தியா, 2026

100* - பின் ஆலன் (நியூசிலாந்து) vs தென்னாப்பிரிக்கா, 2026

96* - திலகரத்னே தில்ஷான் (இலங்கை) vs வெஸ்ட் இண்டீஸ், 2009

89* - விராட் கோலி (இந்தியா) vs வெஸ்ட் இண்டீஸ், 2016

89 - சஞ்சு சாம்சன் (இந்தியா) vs இங்கிலாந்து, 2026

86* - அலெக்ஸ் ஹேல்ஸ் (இங்கிலாந்து) vs இந்தியா, 2022

இதன் மூலம் 2016 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 89* ரன்கள் எடுத்திருந்த விராட் கோலியின் சாதனையை தற்போது சஞ்சு சாம்சன் சமன் செய்துள்ளார்.