கிரிக்கெட்

முன்னேற்றம் செய்ய வேண்டிய பல விஷயங்கள் உள்ளன: ஆஸ்திரேலியா கேப்டன்

டாம் பான்டன் தொடர்நாயகன் விருதும் கைப்பற்றினர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹோபர்ட்டில் நேற்று நடந்தது.'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் பான்டன், பென் டக்கெட் ஆகியோர் களம் இறங்கி னர். இருவரும் அருமையாக ஆடி நல்ல தொடக்கம் அமைத்தனர். ஸ்கோர் 74 ரன்னை (8.4 ஓவரில்) எட்டிய போது டாம் பான்டன் 44 ரன்னில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த ஜோ ரூட் 12 ரன்னிலும், கேப்டன் ஹாரி புரூக் 17 ரன்னிலும். ஜோர்டான் காக்ஸ் 12 ரன்னிலும், ஜோப்ரா ஆர்ச்சர் 7 ரன்னிலும் ஆட்டமிழந் தனர். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய பென் டக்கெட் 94 பந்துகளில் சதத்தை எட்டினார். அவர் அடித்த 7-வது சதம் இதுவாகும். அபாரமாக ஆடிய பென் டக்கெட் 133 ரன்னில் (115 பந்து, 15 பவுண்டரி, 3 சிக்சர்) மேட் ரென்ஷா சுழலில் விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்லிஸ்சிடம் சிக்கினார்.

ஆஸ்திரேலிய அணி

ஆஸ்திரேலிய அணியில் மேட் ரென்ஷா (55 ரன்), அலெக்ஸ் கேரி (37 ரன்), ஜாக் எட்வர்ட்ஸ் (31 ரன்) தவிர மற்றவர் கள் தாக்குப்பிடிக்கவில்லை. கேப்டன் மிட்செல் மார்ஷ் ஒரு ரன்னிலும், டிராவிஸ் ஹெட் 4 ரன்னிலும், கேமரூன் கிரீன் 3 ரன்னிலும் (ரிட்டயர்டு ஹர்ட்) வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். 46.5 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 231 ரன்னில் அடங்கியது. இதனால் இங்கிலாந்து அணி 97 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து தரப்பில் சோனி பாகெர் 4 விக்கெட் டும், லியாம் டாவ்சன் 3 விக்கெட்டும் சாய்த்தனர். இங்கிலாந்து வீரர்கள் பென் டக்கெட் ஆட்டநாயகன் விருதும். டாம் பான்டன் தொடர்நாயகன் விருதும் கைப்பற்றினர்.

இங்கிலாந்து அணி

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 135 ரன் வித்தியாசத்திலும் வென்றிருந்தது. 2018-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இங்கிலாந்து வெல்வது இதுவே முதல்முறையாகும்.

தோல்வி தொடர்பாக பேசிய ஆஸ்திரேலியா கேப்டன் மார்ஷ் ,

முதலில் இங்கிலாந்து அணிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த இரண்டு போட்டிகளிலும் அவர்கள் எங்களைவிடச் சிறப்பாக விளையாடினார்கள். எங்கள் அணியில் முன்னேற்றம் செய்ய வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. எனவே, இன்னும் நிறைய உழைக்க வேண்டியுள்ளது."

தொடரில் நாங்கள் வெற்றி பெறவில்லை என்றாலும், இந்த வீரர்கள் குழுவைப் பற்றி எனக்கு இன்னும் அதிக நம்பிக்கையும் உற்சாகமும் இருக்கிறது. அணியில் அனுபவம் குறைந்த வீரர்களும் இருக்கிறார்கள், அதே நேரத்தில் அனுபவம் வாய்ந்த வீரர்களும் உள்ளனர்.

இது ஒரு நல்ல வீரர்கள் குழு. இளம் வீரர்கள் சிறப்பான திறமையைக் கொண்டுள்ளனர். அவர்கள் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் தங்களது பயணத்தைத் தொடங்கி முன்னேறி வருகின்றனர்.

அடுத்த ஒருநாள் உலகக் கோப்பைக்கு இன்னும் 12 மாதங்கள் இருக்கின்றன. அதற்குள் எங்களை நாங்கள் மேம்படுத்திக் கொள்வோம். உலகக் கோப்பையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT