ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 4-வது ஆட்டம் இன்று (நவம்பர் 29) சிட்னியில் நடைபெறுகிறது. ஏற்கெனவே நடைபெற்ற 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கும்போதே தொடரைக் கைப்பற்றும் வாய்ப்பு இங்கிலாந்து அணிக்கு கிடைத்துள்ளது. அதேவேளையில் சொந்த மண்ணில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் செய்யும் முனைப்பில் களமிறங்குகிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.