லண்டன்,
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள், 1 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரில் 1-1 என்ற புள்ளி கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தது
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அதிகபட்சமாக 56 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து தரப்பில் லொரன் பெல் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் இங்கிலாந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இங்கிலாந்து 18.3 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது.
சிறப்பாக ஆடிய இங்கிலாந்து வீராங்கனைகள் அலிஸ் கெப்சி 82 ரன்களும், ஹிட்டர் நைட் 70 ரன்களும் குவித்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற புள்ளி கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.