கிரிக்கெட்

3வது டி20 போட்டி: இங்கிலாந்துக்கு வலுவான இலக்கு நிர்ணயித்த இந்தியா

டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

லண்டன்,

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள், 1 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரில் 1-1 என்ற புள்ளி கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளன.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

180 ரன்கள்

இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அதிகபட்சமாக 56 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து தரப்பில் லொரன் பெல் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கி விளையாடி வருகிறது.