லண்டன்,
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள், 1 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
டி20 தொடரில் 1-1 என்ற புள்ளி கணக்கில் இரு அணிகளுக்கும் இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.
இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றிபெற்று டி20 தொடரை கைப்பற்ற இரு அணிகளும் போராடும் என்பதால் இப்போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.