கிரிக்கெட்

பந்துவீச்சில் இங்கிலாந்து மிரட்டல்: பாகிஸ்தான் அணி 133 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது.

எட்ஜ்பாஸ்டன்,

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெறும் 133 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தில், இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி விக்கெட்டுகளை இழந்தது.

அசான் அவைஸ் 9 ரன்களிலும், அப்துல்லா ஷபீக் ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஷான் மசூத் 5 ரன்களிலும், கேப்டன் பாபர் அசாம் வெறும் 7 ரன்களிலும் வெளியேறியது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது.

பாகிஸ்தான் அணியில் சவுத் ஷகீல் 43 ரன்கள் எடுத்து அதிகபட்சமாக ரன் குவித்தார். அவரைத் தவிர பெரும்பாலான பேட்டர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டங் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி பாகிஸ்தான் பேட்டிங் சரிவில் முக்கிய பங்கு வகித்தார். ஆலி ராபின்சன் தனது 100-வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தியதுடன், ஜோஃப்ரா ஆர்ச்சரும் முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

SCROLL FOR NEXT