கிரிக்கெட்

உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பில் இந்தியா: பிரெட் லீ

20 ஓவர் கிரிக்கெட் உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பில் இந்தியா முன்னணியில் இருப்பதாக பிரெட் லீ தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ ஐ.சி.சி. இணையதளத்தில் எழுதியுள்ள கட்டுரையில், 20 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டில் நாங்கள் அதிகமாக சாதித்ததில்லை. அதை மாற்றுவதற்கு இதுவே சரியான நேரம். அதற்கு எல்லா வகையிலும் நாங்கள் முயற்சிக்க வேண்டும். ஆனால் இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து போன்ற வலுவான அணிகள் உள்ள நிலையில் கோப்பையை வெல்வது எளிதானது அல்ல.

ஆனால் இந்த ஆஸ்திரேலிய அணியில் திறமையான வீரர்கள் நிறைந்து உள்ளனர். இதில் டேவிட் வார்னர் முக்கிய வீரராக இருப்பார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவர் நடத்தப்பட்ட விதத்தால் அவரது நம்பிக்கை குறைந்திருக்கலாம். ஆனால் அவர் முக்கியமான தருணத்தில் ஜொலிக்கக்கூடியவர் என்றார். உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பில் இந்தியா முன்னணியில் இருப்பதாகவும், இந்த உலக கோப்பையில் அதிக ரன் குவிப்பில் இந்தியாவின் லோகேஷ் ராகுலும், அதிக விக்கெட் வீழ்த்துவதில் முகமது ஷமியும் முதலிடத்தை பிடிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் பிரெட்லீ குறிப்பிட்டார்.