கிரிக்கெட்

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை

8 அணிகளும் மொத்தம் 103 வீரர்களை வசப்படுத்தின.

லாகூர்,

8 அணிகள் இடையிலான 11-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்) டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (மார்ச்) 26-ந் தேதி தொடங்குகிறது. பி.எஸ்.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் நடந்தது. 8 அணிகளும் மொத்தம் 103 வீரர்களை வசப்படுத்தின.

இந்த நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் தொடக்க போட்டிகளை ரசிகர்கள் மைதானத்தில் அமர்ந்து காண அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் மோசின் நக்வி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா-ஈரான் இடையில் போர் நடைபெற்று வருவதால் பிராந்திய பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளார்.