கிரிக்கெட்

கடைசி ஒருநாள் போட்டி: இந்தியா, ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் சென்னை வருகை

சென்னையில் ஒரு நாள் போட்டி நடப்பது 3 ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

சென்னை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆப்கானிஸ் தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங் கேற்றுள்ளது. இதில் தர்மசாலா, லக்னோவில் நடந்த முதல் இரு ஆட்டங் களில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக் கில் கைப்பற்றிவிட்டது.

இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை (சனிக்கிழமை) பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி வீரர்கள் நேற்றிரவு சென்னை வந்து சேர்ந்தனர். ஆப்கானிஸ்தான் வீரர்களும் அவர்களுடன் வந்தனர். இரு அணியினரும் இன்று பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். சென்னையில் ஒரு நாள் போட்டி நடப்பது 3 ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.