கடைசி ஒருநாள் போட்டியில் நமீபியாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 129 ரன்களுக்கு அயர்லாந்து சுருண்டது.
நமீபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் நடைபெற்ற நிலையில் 2-2 என்ற புள்ளிகள் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளன
இந்நிலையில், நமீபியா, அயர்லாந்து இடையேயான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணியின் கேப்டன் லோர்கான் டக்கர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி, நமீபியாவின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரர் டிம் டெக்டர் 5 ரன்களிலும், ஆண்ட்ரூ பால்பிர்னி 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
கேட் கார்மைக்கேல் 27 ரன்களும், ஹாரி டெக்டர் 21 ரன்களும் எடுத்தனர். கேப்டன் லோர்கான் டக்கர் 20 ரன்கள் சேர்த்தார். கீழ்வரிசையில் ஜோர்டான் நீல் 25 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை.
இறுதியில் அயர்லாந்து அணி 33.1 ஓவர்களில் 129 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் நமீபியா அணி விளையாடி வருகிறது.
ஏற்கனவே தொடர் 2-2 என சமநிலையில் உள்ளதால், இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரைக் கைப்பற்றும்.