ஹராரே,
ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு போட்டிகளிலும் ஜிம்பாப்வேயை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது.
ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் நடைபெறும் இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.
இதையடுத்து ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்கள் களமிறங்கி விளையாடி வருகிறது. இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற ஆஸ்திரேலியாவும், ஆறுதல் வெற்றிபெற ஜிம்பாப்வேயும் போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது