கிரிக்கெட்

கடைசி டி20: இந்தியாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் இப்ராஹிம் சத்ரான் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

புதுடெல்லி,

இந்தியாவுக்கு வந்துள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டிடெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் இப்ராஹிம் சத்ரான் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

SCROLL FOR NEXT