டெல்லி,
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்தியா வெற்றிபெற்றது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான 2 டி20 போட்டியிலும் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அதிகபட்சமாக 34 பந்துகளில் 108 ரன்கள் குவித்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் அஸ்மதுல்லா உமர்சாய் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 94 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் இப்ராகிம் அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்தார். சிறப்பாக பந்து வீசிய இந்திய வீரர்கள் நிதீஷ் குமார், ரவி பிஷோனி அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன் மூலம் ஆப்கானிஸ்தானை 127 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது.