கிரிக்கெட்

கடைசி டி20: இந்தியா - ஆப்கானிஸ்தான் நாளை மோதல்

நாளை இரவு 7.30 மணிக்கு இப்போட்டி நடைபெற உள்ளது.

டெல்லி,

இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையேயான கடைசி டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.

இந்தியா - ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான 2 டி20 போட்டிகளிலும் இந்தியா அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.

கடைசி டி20

இந்நிலையில், இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு இப்போட்டி நடைபெற உள்ளது. சோனி ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இப்போட்டி ஒளிபரப்பாக உள்ளது.

இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற இந்தியாவும், ஆறுதல் வெற்றிபெற ஆப்கானிஸ்தானும் போராடும் என்பதால் நாளைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

SCROLL FOR NEXT