கொழும்பு,
பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை கைப்பற்றியது.
இதையடுத்து நடைபெற்ற 2 டி20 போட்டிகளிலும் இலங்கை வென்றது. இதன் மூலம் 2-0 என்ற புள்ளிகள் கணக்கில் டி20 தொடரையும் இலங்கை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இலங்கை பாகிஸ்தான் இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 இன்று நடைபெறுகிறது.
.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் முனீபா அலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.